Abstract Confusions

Complexity is not a cause of confusion. It is a result of it.

Best of Classical Tamil One-Liners from Sangam Literature

சங்க இலக்கியங்களில் காணர்க்கரிய சொல்லமுதங்கள் அங்கங்கே உண்டு. முழு பாடல்களையும் காட்டில்லும் ஓரிரு வரிகளில், வாக்கியங்களில் உணர்த்தும் கருத்து வீச்சு அளப்பரியது. எனக்கு பிடித்த சில இலக்கிய வரிகள் இங்கே:

கற்றோர், பொருள் பெருமை

ஔவையார் பொருளை பற்றி குறிப்பிடும் போது. ஈவது அறம் என்றவர், பொருள் என்பதற்கு ஈட்டல் பொருள் என்று மட்டும் சொல்லாமல், தீவினை விட்டு ஈட்டல் என்று விளக்கினார்.

ஈதல் அறம். தீவினை விட்டு ஈட்டல் பொருள்

அதியமான் குறித்த ஒரு பாடலில், அவனது பரிசில் தரும் பண்பை, யானையின் வாயிடை பட்ட சோற்று உருண்டையுடன் ஒப்பிட்டு, கைக்கு கிட்டியது பொய்க்காது என்னும் பொருள் பட:

யானை தன் கோட்டிடை வைத்த கவளம் போல
கையகத்தது அது பொய்யாகாதே

அதே மன்னன் பரிசில் மறுத்த போது, வாயில்காப்போனை பார்த்து, புலவர்க்கேயான பெரும்மையுடன் :

எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே

கற்றவர்க்கு எந்த திசை சென்றாலும் அந்த திசையில் பொருள் சேர்க்க முடியும் என்றார். இன்னுமொரு தமிழ் புலவர்:

வாழ்தல் வேண்டிப் பொய்கூறேன் மெய்கூறுவல்
யானோர் வாணிகப் பரிசிலனலேன்

வாழ்க்கை வாழ வேண்டும் என்னும் ஒரு பொருட்டு பொய் கூறி பொருள் ஈட்டும் வணிகப் புலவன் அன்று, எப்பொழுதும் மெய் மட்டும் உரைப்பேன் என்றான்.

உவமை நயம் 

இலக்கியங்களில் அங்கங்கு அறிய உவமைகளை படிக்க இயலும். சில இங்கே:

ஞாயிறு காயும் வெவ்வளை மருங்கிற்
கையில் லூமன் கண்ணிற் காக்கும்
வெண்ணே யுணங்கல் போல

உச்சி வேலையில்,  திறந்த வெளியில், வெயிலில் காயும் ஒரு பாறை மீது ஒரு கைப்பிடி வெண்ணையை வைத்து, அதை கைகள் இல்லாத ஊமனை கண்களால் மட்டுமே கானும்மாறு காவலுக்கு இருப்பது போல என்று வினை பொருட்டு சென்ற தலைமகனை பிரிந்து இளமையில் வாடும் தலைமகளை காக்கும் முது மகன் நிலைமை  சொல்லப் பட்டது.

இன்னும் ஒரு குருந்தொகை பாடலில்:

எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையுங் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல

தலைமகன், தலைவியை  பிரிந்து பரத்தையுடன் இருந்தான். அது தவறு என்று உணர்த்து தலைவியை பார்க்க சென்றான். அதற்கு பரத்தை சொல்வது போல: என்னிடம் அளப்பரிய வார்த்தைகளை கூறுவதும், தலைவியை பார்த்தவுடன், நிலை கண்ணாடி முன் நிற்பவர் கைகளை தூக்க, கண்ணாடியுள்ளும் இருக்கும் பிம்பம் திரும்ப செய்யுமே, அதை போல தலைவி சொல்வதை, செய்வதை தவறாமல் கேட்பவன் தலைவன் என்று தோழியிடம் பகடியாக சொன்னது.

2 responses to “Best of Classical Tamil One-Liners from Sangam Literature

  1. NVK Ashraf November 16, 2011 at 8:28 PM

    Good quotes, but unfortunately none of them have the references. Poem numbers would have been useful.

Leave a comment