Abstract Confusions

Complexity is not a cause of confusion. It is a result of it.

Best of Sangam Tamil Poetry – Theme: Uncertainty

தமிழ்ச் சங்க பாடல்களில் என்னை கவர்ந்த சில பாடல்களை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்கும் சமயத்தில் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். தமிழ் செய்யுள்கள் வாழ்வின் எல்லா பரிமாணங்களையும் பிரதிமளித்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது “நிலையாமை” சார்ந்த பாடல்களே. நாலடியார், திருக்குறள், கம்பராமாயணம் என எல்லா நூல்களிலும் இக்கருத்து கொண்ட பாடல்களை காண முடியும். சில இங்கே.

வாழ்வு நிலையாமை

வாழ்வு எவ்வளவு நிலை இல்லாதது? நாலடியார் சொல்கிறது, “வாழ்க்கையில் எதை நிலையானது என்று நினைத்து மனம் அலை பாய்கின்றதோ அது நிலையற்றது. செய்ய வேண்டியது ஒரே காரியம் என்றாலும், அதை விரைந்து செம்மையாக முடியுங்கள், மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம், வாழ் நாள் அறுதியில் முடிந்து விடும்”.

மரணம் எதன் பொருட்டும், யார் பொருட்டும் நில்லாது என்பதை வலியுறுத்திட்டிற்று.

image

ஆங்கில மொழிமாற்றம் கீழே.

The things of which you said, “they stand, they stand”, stand not; mark thee, and perform what befits, yea! what befits, with all your power! Your days are gone, are gone! and death close pressing on is come, is come!

திருக்குறளில் நிலையாமை

திருக்குறளில் நிலையாமை குறித்து 34வது அதிகாரத்தில் சிறப்பாக கூறப்படுகின்றது. மிகச் சிறந்து குறள்கள் இவ்வாதிகாரத்தில் உள்ளன.

“நாள் என்பது, ஒவ்வொரு நாளாக வாழ் நாளின் உயிரை குறைக்கும் கருவி” என பொருள் படும் “நாளென ஒன்று போல் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்” குறளாகட்டும், “மரணம் என்பது மீளா உறக்கம்,  ஒவ்வொரு நாளும் உறங்கி எழுந்தால் மட்டுமே பிறப்பு” எனச் சொல்லும் “உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” குறளாகட்டும், ஒவ்வொன்றும் மற்றதை விட சிறந்தது.

ஆயினும், என்னை பயம் கொள்ள வைத்த குறள் – “நேற்று வரை உன்னுடன், உண்டு, பேசி, சிரித்து, சண்டையிட்டு, மகிழ்ந்திருந்த நெருங்கிய நண்பன் இன்று இல்லை, இனி ஒருபோதும் பேசவோ, சண்டையிடவோ போவதில்லை, இதோ உன் முன் மவுனமாக, மரணமாய், கிடத்தப்பட்டுள்ளான், இந்த உலகு, இத்தகைய சிறப்பு உடையது” எனச்சொன்ன குறள்.

எவ்வளவு கொடுமையான புகழ் இது? நாம் ஒவ்வொருவரும் நெருங்கிய ஒருவரின் மரணத்தை சந்தித்திருப்போம், அப்போதெல்லாம் நம் மனம், இன்றைய தினமும் நேற்றையை போலவோ, நேற்று முன்தினம் போலவோ இருந்திருக்க கூடாதா? என்று புலம்பி இருக்கும்.

image

ஆங்கில மொழிமாற்றம் கீழே.

Existing yesterday, today to nothing hurled! Such greatness owns this transitory world.

இது குறித்து முன்னமே எழுதி உள்ளேன்.

கம்பராமாயணத்தில் நிலையாமை

கம்பராமாயணத்தை நான் முழுமையாக படித்ததில்லை என்றாலும், படித்த சில பாடல்களில் நிலையாமை கருத்துகளை நினைவில் இருத்த முடிந்தது. அம்மாதிரி பாடல்களில் ஒன்றில் கும்பகருணன், தன்னுடன் வந்து ராமனுடன் சேர்ந்து உயிர் பிழைக்க அழைத்த வீடணணிடம் கீழ் கண்டவாறு கூருவான்.

நீர்கோல வாழ்வை நச்சேன், தார்கோல மேனி மைந்தா

நறுமண பூக்களை மாலையாக அனிந்த அண்ணா, நீரின் மீதிட்ட கோலத்தை போன்றது வாழ்கை, இவ்வுயிர்ரை காக்க முனையேன். ராமனுடன் போர் புரிந்து உயிர் விடவே என் விருப்பம், என்பான் கும்பகருணன்.

செல்வம், இளமை நிலையாமை

நாலடியாரில் செல்வம் நிலையாமை குறித்தும், இளமை நிலையாமை குறித்தும் பல செய்யுள்கள் காண முடியும்.

“வேண்டாம், வேண்டாம் என்று மனைவியிடம் வெறுமனே விளையாட்டாய் கூறி மேலும், மேலும் அறுசுவை உணவு  உண்ட செல்வரும், ஒரு நாள் வருந்தி உணவுக்காக பிச்சை எடுப்பர், எனவே செல்வத்தை ஒரு பொருட்டாக கொள்ளாதீர்” எனச் சொல்கிறது ஒரு செய்யுள்.

image

“பெருஞ்செல்வம் கிடைக்கப்பெறின் அதை எல்லொருடனும் பகிர்த்து மகிழ்க, செல்வம் வண்டி சக்கரத்தை போல நில்லாது எல்லோரிடமும் சுழலும்”, என இன்னொரு செய்யுள் செல்வத்தை வாய்த்தபோளுதே நுகரச் சொல்கிறது.

image

இளமை கழிந்த முதுமையை இன்னும் கடுமையாக விவரிக்கின்றது.

“உற்ற நண்பர்களின் தொடர்பு அற்றுபோகும், மகிழ்ச்சியூட்டினாரும் குறைந்து போவர், ஆய்ந்து பார்த்தால் வாழ்வின் அர்த்தம் இருக்காது, அமைதியான ஆழ் கடலில் மூழ்கும் கலம் ஏற்படுத்தும் முனகல் போன்றது மரணத்தின் அழு குரல்” என்று சொல்கிறது.

image
நிலையற்ற இளமையை கருதி வாழ்கையை அமைத்தால் துன்பம் என்பதை விளக்குகின்றது இது.

இன்னும் பல செய்யுள்கள் விதி குறித்து விவரிக்கின்றன. அவை பற்றி இன்னொரு பதிவில், இன்னொரு பொழுது. உங்களுக்கு தெரிந்த செய்யுள்கள் எவையேனும் இருந்தால் சுட்டுக.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: